டெல்லி இளம்பெண் உயிரிழந்த விவகாரம்.! காவல்நிலையம் முன்பு குவிந்த போராட்டக்காரர்கள்.!
டெல்லி இளம் பெண் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் நிலையம் முன்பு போராட்டக்காரர்கள் போராடி வருகின்றனர்.
டெல்லியில் புத்தாண்டு தினத்தன்று அதிகாலை ஸ்கூட்டியில் வந்த ஒரு பெண்ணை காரில் வந்த ஐவர் இடித்து காரில் சில கிமீ தூரம் இழுத்து சென்றுள்ளனர். இதில், அந்த பெண் உயிரிழந்துவிட்டார்.
இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து, வண்டி பதிவெண்ணை வைத்து தீபக் கண்ணா, அமித் கண்ணா, கிரிஷன், மிதுன், மனோஜ் மிட்டல் ஆகிய 5 பேரை டெல்லி சுல்தான்புரி காவல் நிலைய அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், இன்று டெல்லி சுல்தான்புரி காவல் நிலையத்திற்கு வெளியே மக்கள் கூட்டம் கூடி விபத்து ஏற்படுத்தியவர்களுக்கு எதிராக போராட ஆரம்பித்து விட்டனர். அந்த இளம்பெண்ணின் உயிரிழப்புக்கு காரணமானவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் எனவும், அவர்கள் மீது வெறும் விபத்து வழக்கு மட்டுமே பதியப்பட்டுள்ளது எனவும் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் குற்றம் சாட்டியுள்ளார்.