சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் மது விற்பனை மீதான 30 சதவீத வரி ரத்து..!
துபாய் அரசு சுற்றுலா துறையை மேம்படுத்தும் வண்ணம் ஜனவரி 1, 2023 முதல் அனைத்து விதமான மதுபான விற்பனைக்கு 30 சதவீத வரி விதிப்பை ரத்து செய்துள்ளது.
துபாய் அரசு சுற்றுலா துறையை மேம்படுத்தும் வண்ணம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. துபாய் முழுவதும் மதுபான விற்பனையை எளிதாக்கும் வகையிலும், சுற்றுலாப் பயணிகள் மூலம் அதிக வருவாய் ஈட்டும் முயற்சியாகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது,
அதன்படி ஜனவரி 1, 2023 முதல் அனைத்து விதமான மதுபான விற்பனைக்கு 30 சதவீத வரி விதிப்பை ரத்து செய்தும், மதுபான விற்பனைக்கு தேவையான உரிமங்களை இலவசமாக பெற அனுமதிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பின் மூலம் மூலம் துபாய் நாட்டின் சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்க முடியும். மேலும் இதன் வாயிலாக கூடுதல் வருவாய் பெற முடியும் என்று கூறப்படுகிறது.