வணிக எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.25 உயர்வு.!
வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.25 உயர்த்தப்பட்டுள்ளது.
வணிக எரிவாயு சிலிண்டரின் விலை தொடர்ந்து ஏழு முறை குறைக்கப்பட்டதை அடுத்து தற்போது, ரூ.25 உயர்த்தப்பட்டுள்ளது. ஜனவரி 1, 2023 அன்று 19 கிலோ எடையுள்ள எல்பிஜி வணிக சிலிண்டரின் விலை ₹25 கிலோ உயர்த்தப்பட்டுள்ளது.
டெல்லியில் 19 கிலோ வணிக சிலிண்டர் விலை ரூ.1,769 ஆகவும், மும்பையில் ரூ.1,721 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.1,870 ஆகவும், சென்னையில் ரூ.1,971 ஆகவும் உள்ளது. கடந்த நவம்பர்-இல், எண்ணெய் நிறுவனங்கள் வணிக சமையல் எரிவாயுவின் விலையை ரூ.115.5 குறைத்தன.
மேலும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களிலும், வணிக எரிவாயு சிலிண்டர்களின் விலையை முறையே ரூ.91.5 மற்றும் ரூ.25.50 குறைத்தது. கடந்த ஜூன்-க்கு பிறகு, வணிக ரீதியான எல்பிஜி சிலிண்டர்களின் விலை கிலோவுக்கு ரூ.610 குறைந்துள்ளது.
கடந்த ஆண்டில் நான்கு முறை விலை உயர்த்தப்பட்டதை அடுத்து இந்த ஆண்டின் தொடக்கத்தில் எண்ணெய் நிறுவனங்கள் விலையை ரூ.25 உயர்த்தியுள்ளது.