கிறிஸ்துமஸ் தாத்தா வேடமிட்டு குண்டுகளை வீசிய உக்ரைன் போர் விமானி.! வெளியான வைரல் வீடியோ.!
உக்ரைன் ராணுவ போர் விமானி ஒருவர் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து ஏவுகணை வீசும் வீடியோ இணையத்தில் வெகு வைரலாக பரவி வருகிறது.
கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. அதே போல உக்ரைனும் தங்களது பங்கிற்கு பதிலடி கொடுத்து வருகிறது.
உக்ரைன் ராணுவம் தங்களது சமூக வலைதள பக்கத்தில் தாக்குதல் பற்றி அவ்வப்போது பதிவேற்று வருகிறார்கள். அப்படி அவர்கள் பதிவிட்ட ஒரு வீடியோவில் ஓர் போர் விமானி கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து ரஷ்யா மீது ஏவுகணையை வீசும் விடியோ வைரலாக பரவி வருகிறது.
இந்த வீடியோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 2 லட்சம் பார்வையாளர்களை கடந்து உள்ளது.
View this post on Instagram