தூக்கிலிடப்பட வேண்டும்.! குடிபோதையில் பெண்ணின் மீது கார் ஏற்றி இழுத்து சென்ற 5 பேர் குறித்து டெல்லி முதல்வர் காட்டம்.!
குடிபோதையில் பெண்ணை காரில் இழுத்துச் சென்ற 5 பேரை தூக்கிலிடப்பட வேண்டும் என்று டெல்லி முதல்வர் காட்டம்.
டெல்லியை சேர்ந்த 20 வயது இளம்பெண், சாலை விபத்தில் நேற்று உயிரிழந்தார். அதாவது, பெண்ணின் ஸ்கூட்டர் மீது குடிபோதையில் 5 பேர் வந்த கார் மோதி விபத்துக்குள்ளானது. அந்த பெண்ணின் உடைகள் காரின் சக்கரம் ஒன்றில் சிக்கியதால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்தை தொடர்ந்து, அந்த 5 பேர் காரை நிறுத்துவதற்குப் பதிலாக, உடலை 13 கிமீ வரை இழுத்துச் சென்ற அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
இந்த நிலையில், குடிபோதையில் பெண்ணை காரில் இழுத்துச் சென்ற 5 பேரை தூக்கிலிடப்பட வேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆவேசமாக தெரிவித்துள்ளார். டெல்லியில் நேற்று 20 வயது பெண்ணின் உடலை குடிபோதையில் 5 பேர் காருக்கு அடியில் பல கிலோமீட்டர் தூரம் இழுத்துச் சென்றதையடுத்து, இது அரிதான குற்றங்களில் அரிது என கூறியுள்ளார்.
இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களை தூக்கிலிட வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவர்கள் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் விபத்தில் உயிரிழந்த பெண்ணின் உடல் பிரேதப் பரிசோதனை நடைபெற்று வருவதாகவும் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார்.