டெல்லியில் பெண்ணின் ஸ்கூட்டி மீது கார் மோதி கோர விபத்து.! சாலையில் இழுத்து சென்று பெண் உயிரிழந்த சோகம்.!
டெல்லியில் புத்தாண்டு அதிகாலையில் ஒரு பெண்ணை காரில் வந்தவர்கள் இடித்து சாலையோரம் இழுத்து சென்றதில் பெண் உயிரிழந்தார்.
டெல்லியில் நேற்று புத்தாண்டு நாளன்று அதிகாலையில் குடிபோதையில் இருந்த 5 பேர் காரில் செல்கையில் சாலையில் சென்ற 20 வயது இளம் பெண்ணின் மீது மோதி விபத்து ஏற்படுத்தியுள்ளனர்.
இதில் அந்த பெண் காருக்கு அடியில் சிக்கி சில கிலோ மீட்டர் வரையில் இழுத்து செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் டெல்லியில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுப்பட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
இவர்களுக்கு எதிராக பல்வேறு எதிர்ப்பு குரல்கள் வலுத்து வருகின்றன. இந்த சம்பவம் குடிபோதையில் நடைபெற்றதால் தண்டனைகள் கடுமையாக இருக்க வேண்டும் எனவும் குரல்கள் எழுந்து வருகின்றன.
Exclusive #CCTVFootage of #Delhiaccident not even clothes on the girl’s body she died after being dragged by a car in #Delhi In #Kanjhawala dragged the girl for 4 km in the car #KanjhawalaCase #DelhiPolice #Accident #DelhiCrime #KanjhawalaAccident pic.twitter.com/g0OGmX9QYZ
— the khabari club (@club_khabari) January 1, 2023