ஒரே ஆண்டில் வெளியாகும் அஜித்தின் 2 படங்கள்…கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்திற்கான டிரைலர் கூட கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. எனவே படம் வசூல் ரீதியாக பெரிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து அஜித் தனது 62 -வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். அந்த திரைப்படத்திற்கு தற்காலிகமாக ‘AK62’ என தலைப்பு வைக்கப்பட்டிருகிறது. இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குகிறார். படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.
இந்நிலையில், தற்போது இந்த படத்திற்கான படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பதற்கான தகவல் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது. அதன்படி, பொங்கல் பண்டிகை முடிந்து படத்திற்கான படப்பிடிப்பு வரும் ஜனவரி 17-ஆம் தேதி சென்னையில் வைத்து தொடங்கப்படவுள்ளதாம்.
இதையும் படியுங்களேன்- வாழ்க்கையில் என்ன பிரச்சனை வந்தாலும் இப்படி தான் இருக்கனும்…செல்வராகவன் கூறிய இன்றைய அட்வைஸ்.!
மேலும் படத்தின் படப்பிடிப்பை மே மாதம் முடித்துவிட்டு படத்தை வரும் தீபாவளிக்கு திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே ஒரே ஆண்டில் துணிவு, ak62, என அஜித்தின் இரண்டு படங்கள் வெளியாகவுள்ளதால் அவருடைய ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.