உத்திர பிரதேச ஐடி ஊழியர்களுக்கு சூப்பர் அறிவிப்பு.! பணி நேரத்தில் ஓய்வெடுக்க மதுபான பார் வசதி.!
உ.பி நொய்டாவில் ஐடி நிறுவன வளாகங்களில் மதுபான பார்களை திறந்து வைக்க அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர்.
உத்திர பிரதேச மாநிலத்தில் நொய்டா நகரத்தில் இயங்கும் ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு ஓய்வு நேரம் என்பது தேவை. ஆதலால், ஐடி நிறுவன வளாகத்தில் மதுபான பார்களை திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை நீண்ட நாட்களாக வைத்து இருந்தனர்.
இந்த கோரிக்கை தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. நொய்டா நகரத்தில் இயங்கும் ஐடி நிறுவனங்கள் தங்கள் பணியாளர்கள் மற்றும் பார்வையாளர்களுக்காக பார்களை திறந்து வைக்க அனுமதி அளித்து நொய்டா ஆணைய அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.