1000, 500 நோட்டுகள் மதிப்பிழப்பு செய்தது தவறு – ஒரு நீதிபதி மாறுபட்ட தீர்ப்பு
பணமதிப்பிழப்பு தொடர்பான வழக்கில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் 4 நீதிபதிகள் ஆதரவாகும், நீதிபதி நாகரத்னா எதிராகவும் தீர்ப்பளித்துள்ளார்.
நாட்டில் 1000, 500 நோட்டுகள் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மத்திய அரசு செய்தது சரியானதே என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. இதனால், மத்திய அரசு மேற்கொண்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என்றும் இதில் எந்த தவறும் இல்லை எனவும் தீர்ப்பளிக்கப்பட்டது.
இனி அதனை திரும்ப பெற முடியாது எனவும் உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது. பணமதிப்பிழப்புக்கு எதிராக போடப்பட்ட 58 மனுக்களையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இனி எதிர்கட்சிகள் உட்பட யாரும் இந்த நடவடிக்கையை தவறானது என சொல்ல முடியாது.
மத்திய அரசுக்கு மிகப்பெரிய சாதகமான தீர்ப்பாக அமைந்துள்ளது. இருப்பினும், பண மதிப்பிழப்பு தொடர்பான வழக்கில் ஒரு நீதிபதி மட்டும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளார். அதாவது, ஒரே அரசாணை மூலம் 1000, 500 நோட்டுகள் மதிப்பிழப்பு செய்தது தவறு என 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வின் நீதிபதிகளில் ஒருவர் நாகரத்னா மாறுபட்ட தீர்ப்பு வழங்கினார்.
அவரது மாறுபட்ட தீர்ப்பில், பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ள அதிகாரம் உள்ளது என்ற கவாய் தீர்ப்பில் இருந்து மறுபடுவதாக உள்ளது. ரிசர்வ் வங்கி சட்ட விதிகள்படி, மத்திய அரசு முடிவெடுக்க முடியாது.
மத்திய அரசு சட்டம் இயற்றியே பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டிருக்க வேண்டும். ரகசியத்தை காக்க தேவைப்பட்டால் அவசர சட்டம் கூட நிறைவேற்றி இருக்கலாம். ரிசர்வ் வங்கியை கலந்து ஆலோசித்து பிறகே மத்திய அரசு பணமதிப்பிழப்பு முடிவை எடுத்துள்ளது என 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் 4 நீதிபதிகள் ஆதரவாகும், நீதிபதி நாகரத்னா எதிராகவும் தீர்ப்பளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.