அதிகரிக்கும் கொரோனா..! மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா..? – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
கொரோனாவின் வீரியம் அதிகரித்தால், மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், கொரோனா காலத்தில் பணியமர்த்தப்பட்ட ஒப்பந்த செவிலியர்களுக்கு ரூ.4000 ஊதிய உயர்வுடன் மாற்றுப்பணி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும், வெளிநாட்டில் இருந்து வந்த 13 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 13 பேரில் யாருக்கும் BF.7 பாதிப்பு இல்லை. கொரோனாவின் வீரியம் அதிகரித்தால், மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.