200 பில்லியன் டாலர் சொத்துகளை இழந்த முதல் நபர் எலான் மஸ்க்! வெளியான தகவல்.!
எலான் மஸ்க் தனது நிகர சொத்து மதிப்பில், 200 பில்லியன் டாலர்களை இழந்த முதல் நபர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
உலகின் மிகப்பெரிய பணக்காரர் என்று அறியப்பட்ட எலான் மஸ்க், தனது மொத்த சொத்து மதிப்பிலிருந்து கிட்டத்தட்ட 200 பில்லியன் டாலர்களை இழந்துள்ளார் என ப்ளூம்பெர்க் தெரிவித்தது. 51 வயதான எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டு நவம்பர் 2021இல் 340 பில்லியன் டாலர் அளவுக்கு உயர்ந்தது.
மேலும் இந்த மாத தொடக்கத்தில் லூயிஸ் வுட்டன் தலைமை நிறுவனரான பெர்னார்ட் அர்னால்ட், மஸ்க்கின் சொத்துமதிப்பை விட அதிகம் பெற்று 171 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலகின் மிகப் பெரிய பணக்காரராக இருந்தார்.
ஆனால் எலான் மஸ்க், ட்விட்டரை தன்வசம் கொண்டுவந்ததில் இருந்து அவருக்கு மிகப்பெரும் சவாலாக இருந்து வருகிறது. மேலும் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான டெஸ்லாவின் பங்குகள் சரிந்ததால் அவரின் சொத்து மதிப்பும் குறைந்து, தற்போது 137 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 200 பில்லியன் டாலர்கள் இழந்த முதல் நபர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.