துணிவு படத்தில் யார் யாருக்கு என்னென்ன கதாபாத்திரம்..? முழு விவரம் இதோ.!
இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
வங்கியில் பணம் கொள்ளையடிக்கும் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே படத்திலிருந்து வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், விரைவில் படத்தின் டிரைலர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், தற்போது துணிவு திரைபடகில் நடிக்கும் நடிகர்கள் நடிகைகளின் கதாபாத்திரங்களின் பெயர் என்ன என்பதை படக்குழு வரிசையாக அறிவித்துள்ளது.
- அஜித் – அஜித்குமார்
- மஞ்சுவாரியர் – கண்மணி
- மோகன் சுந்திரம் – மைஃபா
- பிரேம் -பிரேம்
- வீரா -ராதா
- ஜான் கொக்கைன் – கிரிஷ்
- சி.எம் சுந்தர் -முந்தழகன்
- அஜய் -ராமச்சந்திரன்
- சமுத்திரக்கனி – தையலான்
- பகவதி பெருமாள்-ராஜேஷ்