எனக்கு சிம்புவுக்கும் கல்யாணம்…பிக் பாஸ் நடிகை பேச்சு…வைரலாகும் வீடியோ.!

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் வாரம் வாரம் Oo ‘Solriya Oo Oohm Solriya’ எனும் நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்று நடந்து வருகிறது. இந்த நகைச்சுவை நிகழ்ச்சியை மாக்காபாவும், பிரியங்காவும் தொகுத்து வழங்கி வருகிறார்கள்.

இதில் ஒவ்வொரு வாரமும் 3 பிரபலங்கள் வருவார்கள், அந்த வகையில், இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமான ஐஸ்வர்யா தத்தா, சாக்ஷி அகர்வால், அனிதா சம்பத் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

அதற்கான ப்ரோமோ ஒன்றையும் விஜய் தொலைக்காட்சி தற்போது வெளியிட்டுள்ளது. அதில் தொகுப்பாளினி பிரியங்கா உங்களை பற்றி நீங்களே கேள்வி பட்ட ஜாலியான தகவல் என்னது என்று கேட்டார் அதற்கு முதலில் பதில் அளித்த ஐஸ்வர்யா ” எனக்கும் சிம்புவுக்கும் திருமணம் என செய்தி வந்தது” என சிரித்துக்கொண்டே கூறினார்.

 பிறகு நடிகை சாக்ஷி அகர்வால் “விராட் கோலியின் முதல் பெண்தோழி நான் தான் என என்று செய்தி வந்தது” இதனை கேட்ட மாக்கப்பா கோப படுவது போல் ஜாலியாக  அங்கிருந்த பொருட்களை தள்ளிவிட்டார். அந்த ப்ரோமோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Comment