வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!
தாயின் இறுதி சடங்கை முடித்தபின் வந்தே பாரத் ரயில் தொடக்க விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு.
மேற்கு வங்கம் மாநிலத்தில் வந்தே பாரத் ரயில் தொடக்க விழாவில் பிரதமர் மோடி காணொளி வாயிலாக குஜராத்தில் இருந்து பங்கேற்றுள்ளார். தாயின் இறுதிச்சடங்கு நடத்தி முடித்து சில மணி நேரங்களிலேயே அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் பிரதமர் மோடி. இன்று தாயாரின் இறுதி சடங்கில் கலந்துகொண்ட நிலையில், தற்போது காணொளியில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றார் பிரதமர் நரேந்திர மோடி.
அப்போது, மம்தா பானர்ஜி ஆறுதல் கூறியபோது உணர்ச்சிவசப்பட்டார் பிரதமர் மோடி. இதன்பின், ஹவுரா – நியூஜல் பைகுரி இடையே வந்தே பாரத் ரயில் சேவையை காணொளி மூலம் பிரதமர் தொடங்கி வைத்தார். ஏற்கனவே திட்டமிடப்பட்ட நிகழ்ச்சியாக வந்தே பாரத் ரயில் தொடக்க விழா இன்று இருந்தது. இதனால் தவிர்க்க முடியாத காரணமாக தனக்கு ஏற்பட்ட பெரும் இழப்பிற்கு மத்தியிலும் அந்த நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்று, ரயில் சேவை துவக்கி வைத்தார்.