எனக்கு நயன்தாராவுக்கும் போட்டி இருப்பது நல்லது தான்…த்ரிஷா ஓபன் டாக்.!
நடிகை த்ரிஷா நடிப்பில் இயக்குனர் எம்.சரவணன் இயக்கத்தில் இன்று திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ராங்கி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் நல்ல ஓப்பனிங் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், படத்தின் ப்ரோமோஷனுக்காக சமீபத்திய பேட்டி ஒன்றில் நயன்தாரவுக்கும் தனக்கும் இருக்கும் போட்டி குறித்து பேசியுள்ளார். இது குறித்து பேசிய த்ரிஷா ” சினிமா துறையில் இருக்கும் நடிகைகளுக்கு போட்டி இல்லாமல் இருக்காது. அதைப்போல எனக்கும் நயன்தாராவுக்கு ஆரோக்கியமான போட்டி இருக்கும் வரை நல்ல விஷயம் தான்.
இதையும் படியுங்களேன்- படத்தை பார்த்து மிரண்டு போயிட்டேன்…‘துணிவு’ படத்தை வெளியிடும் ‘வாரிசு’ தயாரிப்பாளர்.!
ஏனென்றால், ரசிகர்கள் பலரும் தங்களுக்கு எந்த ஹீரோயின்களை பிடிக்கிறதோ அந்த ஹீரோயினுக்கு தான் ஆதரவு கொடுப்பார்கள். போட்டி ஆரோக்கியமானதாக இருக்கும் வரை நல்லது தான். எனக்கு பிடிக்காத ஒரு விஷயம் என்னவென்றால், ஒரு நடிகையை ஆதரிப்பதற்காக மற்றொருவரை அசிங்கப்படுத்துவது தான். அது மட்டும் செய்யாதீர்கள்” என ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் நடிகை த்ரிஷா.
மேலும், இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகை த்ரிஷா அடுத்ததாக தளபதி 67 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். இவரது நடிப்பில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 28 -ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.