பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிக்க தடை..! கல்வி சான்றிதழ்களை கிழித்தெறிந்த ஆப்கான் பேராசிரியர்..!
பட்டய படிப்பு சான்றிதழ்களை கிழித்து எறிந்த ஆப்கான் பேராசிரியர்.
ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கான பல்கலைக்கழக கல்விக்கு காலவரையற்ற தடை விதித்து தலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர். உயர்கல்வித்துறை அமைச்சகம், அனைத்து அரசு மற்றும் தனியார் பல்கலைக் கழகங்களுக்கு இந்த உத்தரவிற்கான கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
மேலும், மறு அறிவிப்பு வரும் வரை, பெண்களின் கல்வியை நிறுத்தி வைக்கும் உத்தரவை உடனடியாக அமல்படுத்துமாறு அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், காபூல் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஒருவர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.
அந்த நிகழ்ச்சியில் அவர் பேசும்போது இன்று முதல் எனக்கு எனது கல்வி சான்றிதழ்கள் தேவையில்லை. இந்த நாட்டில் கல்விக்கு இடம் இல்லை. எனது தாயும், என் சகோதரியும் படிக்க முடியாது என்றால் எனக்கு கல்வி சான்றிதழ்கள் தேவையில்லை என்று உருக்கமாக கூறினார்.
மேலும் அவ்வாறு பேசிக் கொண்டிருக்கும்போது அவர் தன்னிடம் இருந்த பட்டய படிப்பு சான்றிதழ்களை கிழித்து எறிந்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த வீடியோவை ஆப்கானிஸ்தானின் முன்னாள் அமைச்சரின் ஆலோசகர் ஷப்னம் நசிமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.