ஸ்பேஸ்எக்ஸ், 60-வது மிஷனில் 54 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி சாதனை.!
ஸ்பேஸ்எக்ஸ் 2022 ஆம் ஆண்டில் தனது 60-வது மிஷனில் 54 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியுள்ளது.
ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனமானது, புளோரிடாவின் கேப் கனாவரல் விண்வெளி நிலையத்தில் இருந்து 54 ஸ்டார்லிங்க் இணைய செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியுள்ளது. இது 2022 ஆம் ஆண்டில் ஸ்பேஸ்எக்ஸ்-இன் 60-வது மிஷனாகும்.
இது விண்ணில் செலுத்தப்பட்டுள்ள ஸ்டார்லிங்கின் முதல் மேம்படுத்தப்பட்ட நெட்வொர்க் செயற்கைகோள். ஸ்பேஸ்எக்ஸ், பூமியின் குறைந்த சுற்றுப்பாதைகளுக்கு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியுள்ளதாக தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளது.
இப்போது நாம், செயற்கைக்கோள்களை புதிய சுற்றுப்பாதைகளுக்கு அனுப்ப முடியும், இது நெட்வொர்க்கிற்கு இன்னும் அதிக திறனை சேர்க்கும்” என்று ஸ்பேஸ்எக்ஸ் கூறியது. கடந்த ஆண்டு ஸ்பேஸ்எக்ஸ், மொத்தம் 31 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியது குறிப்பிடத்தக்கது.