பிரதமரின் தாயார் குணமடைய முதலமைச்சர் வாழ்த்து.!

Default Image

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் விரைந்து குணமடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து.

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடியின் உடல்நிலை குறைவு காரணமாக அகமதாபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரதமர் மோடியின் தாயார் விரைந்து குணமடைய வேண்டும் என அரசியல் தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில், பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் விரைந்து குணமடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், பிரதமரின் தாயார் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அறிந்து வேதனை அடைந்தேன். அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்