உங்கள் அம்மா விரைவில் குணமடைய வேண்டுகிறேன்..! பிரதமர் மோடிக்கு ஆறுதல் கூறிய ராகுல் காந்தி..!
மோடி ஜி இந்த கடினமான நேரத்தில் எனது அன்பு ஆதரவும் உங்களுடன் இருக்கிறது என ராகுல் காந்தி ட்விட்.
பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடியின் உடல்நிலை நேற்று இரவு மோசமடைந்ததையடுத்து அகமதாபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், ராகுல் காந்தி அவர்கள் பிரதமர் மோடிக்கு ஆறுதல் தெரிவித்து ட்விட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘தாய்கும் மகனுக்கும் இடையிலான அன்பு நித்தியமானது, விலைமதிப்பற்றது. மோடி ஜி இந்த கடினமான நேரத்தில் எனது அன்பு ஆதரவும் உங்களுடன் இருக்கிறது.உங்கள் அம்மா விரைவில் குணமடைவார் என்று நம்புகிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.