BREAKING NEWS:பேங்க் ஆப் இந்தியா வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட ரூ.10 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் மீட்பு!3 பேர் கைது!12 மணி நேரத்தில் காவல்துறையினர் அபாரம்!

Default Image

பேங்க் ஆப் இந்தியா வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட ரூ.10 கோடி மதிப்புள்ள 32 கிலோ எடையுள்ள தங்க நகைகள் மீட்க்கப்பட்டுள்ளது.

வங்கி மேலாளர், காவலாளி உள்பட 8 பேரிடம் போலீசார், திருவள்ளூர் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் அடகு வைக்கப்பட்டிருந்த 10 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள், கள்ளச்சாவி உதவியுடன் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில்  விசாரணை மேற்கொண்டனர்.

திருவள்ளூர் ஜே.என்.சாலையில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தின் கீழ் தளத்தில் நீல்கிரீஸ் சூப்பர் மார்க்கெட்டும், முதல் மாடியில் பேங்க் ஆஃப் இந்தியா வங்கிக் கிளையும், இரண்டாவது மாடியில் பைவ் ஸ்டார் என்ற தனியார் நிதி நிறுவனமும் இயங்கி வருகின்றனர்.

சனி, ஞாயிறு என இரண்டு நாள் விடுமுறைக்குப் பிறகு வங்கியைத் திறக்க வந்த ஊழியர்கள், முன்பகுதி கேட் திறக்கப்பட்டிருப்பதை கண்டனர். இந்த கேட் மேலே உள்ள பைவ் ஸ்டார் நிதி நிறுவனத்துக்கும், வங்கிக்கும் பொதுவானது என்பதால், அதை பெரிதாக கண்டுகொள்ளாத வங்கி ஊழியர்கள், உள்ளே சென்றபோது வங்கியின் கிரில் கேட் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர், உள்ளே சென்று பார்த்தபோது, லாக்கர் அறையின் கதவு மற்றும் லாக்கர்களும் கள்ளச்சாவி மூலம் திறக்கப்பட்டிருப்பதை கண்டுள்ளனர்.

இது தொடர்பாக வங்கி மேலாளர் சேகர், போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபிசக்கரவர்த்தி, விசாரணை நடத்தினார். அப்போது, வங்கி லாக்கரில் இருந்த 8 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதும், அவை வாடிக்கையாளர்கள் 6 கோடி ரூபாய்க்கு அடகு வைத்திருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, கைரேகை நிபுணர்களை வரவழைத்து, தடயங்களைச் சேகரித்த போலீசார், வங்கியில் உள்ள 7 சி.சி.டி.வி. கேமராக்களிலும், கீழ்தளத்தில் நீல்கிரீஸ் சூப்பர் மார்க்கெட்டில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராவிலும் கொள்ளையர்கள் உருவம் பதிவாகியுள்ளதா எனவும் ஆய்வு செய்தனர். அதில் சில ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக கூறும் போலீசார், சனி, ஞாயிறு என இருநாட்கள் விடுமுறைக்கு பிறகு கொள்ளை தெரியவந்துள்ளதால், கொள்ளை எப்போது நடந்தது என்றும் விசாரித்து வருவதாக கூறுகின்றனர்.

வங்கிக்கு துப்பாக்கி ஏந்திய காவலாளி இல்லாத நிலையில், 5 தனிப்படை அமைத்து விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர். மேலும், இந்த கொள்ளையில் வங்கி ஊழியர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், மேலாளர் சேகர் மற்றும் காவலாளி உள்பட 8 வங்கி ஊழியர்கள் பேரிடம் போலீசார் விசாரித்தனர். இதனிடையே, கொள்ளை சம்பவம் குறித்து அறிந்த வாடிக்கையாளர்கள் வங்கி முன் திரண்டனர். யாருடைய நகைகள் கொள்ளை போனது என்ற விவரத்தை வங்கி அதிகாரிகள் இதுவரை தெரிவிக்கவில்லை என்றும் அவர்கள் குற்றஞ்சாட்டி, மாவட்ட எஸ்.பி.யை சூழ்ந்து கொண்டு முறையிட்டனர்.

இந்நிலையில் தற்போது பேங்க் ஆப் இந்தியா வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட ரூ.10 கோடி மதிப்புள்ள 32 கிலோ எடையுள்ள தங்க நகைகள் மீட்க்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக  வங்கி ஊழியர் விஸ்வநாதன் உள்பட 3 பேர் கைது செய்து திருவள்ளூர் மாவட்ட காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.12 மணி நேரத்தில்மீட்டு காவல்துறையினர் நடவடிக்கை .

மேலும்  செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

live news
MK stalin
pm modi mk stalin
PMmodi - Kuwait
sekar babu
Andhra woman receives human remains
pushpa 2 ott