அஜித் எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை….’AK62′ குறித்து மனம் திறந்த விக்னேஷ் சிவன்…!

Default Image

நடிகர் அஜித் தற்போது துணிவு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக அஜித் தனது 62-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

Thunivu Movie
Thunivu Movie [Image Source : Twitter]

தற்காலிகமாக ‘AK62’ என தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் அந்த திரைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குகிறார். படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். விரைவில் படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது.

இதையும் படியுங்களேன்- நயன்தாராவுடன் நட்பெல்லாம் இல்ல…போட்டி இருந்தா நல்லது தான்…மனம் திறந்த த்ரிஷா…!

AK62 Movie
AK62 Movie [Image Source: Twitter ]

இதற்கிடையில், இயக்குனர் விக்னேஷ் சிவன் சமீபத்திய பேட்டி ஒன்றில் AK62 படம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் ” எனது அடுத்த படத்தின் கதையில் எனக்கு முழுவதுமாக சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. இது தான் எனக்கு அஜித் சார் முதலில் கொடுத்த அறிவுரை.

Ajith And Vignesh Shivan
Ajith And Vignesh Shivan [Image Source: Twitter ]

இது உங்கள் படம் நீங்கள் விரும்பியதை செய்யுங்கள் என்பது மட்டும் தான், இதனால் எனக்கு எந்த வித அழுத்தமும் கிடையாது. பிடித்ததை செய்வேன். எனவே ‘AK62’  திரைப்படம் 100 % என்னுடைய படமாக உருவாகும் என தெரிவித்துள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்