பிக் பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்.! வைரலாகும் ப்ரோமோ….

Default Image

பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 80-வது நாளை எட்டியுள்ள நிலையில், வீட்டிற்குள் ஷிவின், அசீம், விக்ரமன், எடிகே, மைனா நந்தினி, ரச்சிதா, மணிகண்டன், கதிரவன், அமுதவாணன், ஆகிய 9 பேர் இருக்கிறார்கள். நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளதால் யார் வெற்றிபெற போகிறார் என்ற எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

Bigg Boss Freeze Task DAY 79
Bigg Boss Freeze Task DAY 79 [Image Source : Twitter]

மேலும், இந்த வாரம் வீட்டிற்குள் ‘ஃப்ரீஸ் டாஸ்க்’ நடைபெற்று வருகிறது. அதாவது, பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்களின் குடும்பத்தினர் வருவார்கள். அவர்களிடம் பேச வைத்து அதனை வீடியோவாக வெளியீடுவார்கள். அந்த வகையில் நேற்று ஷிவினின் அக்காவும், மைனாவின் கணவரும் வீட்டிற்குள் வருகை தந்தார்கள்.

இதையும் படியுங்களேன்- இது என்னமா சேலை..? கவர்ச்சி புகைப்படங்களை வெளியீட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த லாஸ்லியா.!

Bigg Boss Freeze Task Day 80 Promo
Bigg Boss Freeze Task Day 80 Promo [Image Source : Twitter]

அவர்களை தொடர்ந்து இன்று மணிகண்டனின் அம்மா, மனைவி, மகன், ஆகியோர் வருகை தந்துள்ளார்கள். அவர்களை பார்த்ததும் மணிகண்டன் வேகமாக ஓடி சென்று தனது மகனை கட்டி அனைத்து முத்தமிட்டார். அவருடைய அம்மாவும் மணிகண்டனை கட்டி அணைத்து அழ தொடங்கினார்.

Bigg Boss Aishwarya Rajesh Entry
Bigg Boss Aishwarya Rajesh Entry [Image Source : Twitter]

பிறகு மூவரும் பிக் பாஸ் வீட்டிற்குள் வர சர்ப்ரைஸ் என்ரியாக நடிகையும், மணிகண்டனின் தங்கையுமான ஐஸ்வர்யா ராஜேஷ் திடீர் என்ட்ரி கொடுத்தார். இதனால் அங்கிருந்த பலரும் ஐஸ்வர்யா ராஜேஷை இன்ப அதிர்ச்சியுடன் பார்த்தனர். அதற்கான ப்ரோமோவையும் விஜய் தொலைகாட்சி வெளியிட்டுள்ளது. அந்த ப்ரோமோ தற்போது வைரலாகி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

live update
Union Minister Amit shah
Pushpa2
TVK Vijay - Union minister Amit shah
chennai rains
OneNation OneElection - Vijay Antony
Savuku Sankar arrested