#BREAKING: டிச.30 முதல் பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம் – அமைச்சர் அறிவிப்பு
பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் விநியோகம் டிச.31ம் தேதி தொடங்கும் என அமைச்சர் அறிவிப்பு.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நியாயவிலை கடைகளில் குடும்ப அட்டைதாரர்கள், இலங்கை மறுவாழ்வு மையத்தில் இருப்பவர்களுக்கு பொங்கல் பரிசாக 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் 1000 ரூபாய் ரொக்கம் பணம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.
பொங்கல் பரிசுக்கான டோக்கன் விநியோகம் விரைவில் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் பெரியகருப்பன், பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் விநியோகம் டிச.31ம் தேதி தொடங்கும் என அறிவித்தார்.
பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் குறித்த ஆலோசனைக்கு பிறகு அமைச்சர் தெரிவித்துள்ளார். அதன்படி, டிசம்பர் 30, 31, ஜனவரி 2,3,4 ஆகிய தேதிகளில் பொங்கல் பரிசுக்கான டோக்கன் விநியோகம் செய்யப்படும் என்றும் பொங்கல் பரிசு தொகை ரூ.1,000 நேரடியாக ரொக்கமாக வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
மேலும், மக்கள் தங்கள் வீட்டில் இருந்து பைகளை கொண்டு வர வேண்டும், இலவச பை வழங்கப்பட மாட்டாது. குடும்ப அட்டைதாரர்கள் எந்த கிழமைகளில் பொங்கல் தொகுப்பு பெறலாம் என்பது டோக்கனில் குறிப்பிடப்பட்டிருக்கும். 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை சேர்க்க ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.