ராகுலின் பயணத்தை தடுக்கவே கொரோனா நாடகம் – கே.சி.வேணுகோபால்
கொரோனா பரவல் குறித்து காங்கிரஸ் கட்சியும் அக்கறை கொண்டுள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவர் பேச்சு.
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை தடுக்கவே, கொரோனா நாடகத்தை பிரதமர் உருவாக்கி உள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவர் கேசி வேணுகோபால் குற்றசாட்டியுள்ளார்.
கொரோனா பரவல் குறித்து காங்கிரஸ் கட்சியும் அக்கறை கொண்டுள்ளதாகவும், சீனாவில் இருந்து விமானங்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. தேசிய அளவில் கொரோனா கட்டுப்பாடு எதுவும் அமலில் இல்லை எனவும் தெரிவித்தார். பொது கூட்டங்களில் பேசி வரும் பிரதமர் மோடிக்கு கொரோனா பற்றி எந்த கடிதமும் அனுப்பப்படவில்லை எனவும் கூறியுள்ளார்.