ரஷ்ய தொழிலதிபர் இந்தியாவில் உயிரிழப்பு.! பிறந்தநாள் கொண்டாட வந்தவருக்கு நேர்ந்த சோகம்.!
ஒடிசாவில் உள்ள தனியார் ஹோட்டலில் ரஷ்ய தொழிலதிபரும், அரசியல்வாதியுமான பாவல் அண்டவ் உயிரிழந்தார்.
ஒடிசாவில் உள்ள தனியார் ஹோட்டலில் ரஷ்ய தொழிலதிபரும், அரசியல்வாதியுமான பாவல் அண்டவ் என்ற 65வயதான நபர் தனது பிறந்தநாள் விடுமுறையை கொண்டாட இந்தியா வந்துள்ளார் .
இந்நிலையில், அவர் கடந்த சனிக்கிழமை அன்று தான் தங்கியிருந்த ஹோட்டலின் மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
பாவல் அண்டவ் உயிரிழப்பதற்கு முன்னர் மன அழுத்தத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.