கிலாயூ எரிமலை வெடித்ததில் ஹவாய் தீவில் உருகிய பாறைகள்!
கடந்த 3 ஆம் தேதி ஹவாய் தீவில் அமைந்துள்ள கிலாயூ எரிமலை வெடித்த நிலையில், இரு நாட்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை அமெரிக்க புவியியல் ஆய்வுமையம் வெளியிட்டுள்ளது. உருகிய எரிமலை இரவு நேரத்தில் தீப்பிழம்பாக காட்சியளிக்கும் நிலையில், பகல் நேரத்தில் தீக்குழம்பாக காட்சியளித்தது.
பாறைகளை உருக்கி அலைஅலையாக பெருகிவரும் தீக்குழம்பு, எதிர்பட்டதையெல்லாம், தீக்கிரையாக்கிய நிலையில், ஹவாயில் அமைந்துள்ள Pahoa ன் வீதி வழியே பரவியது. கிலாயூ எரிமலை வெடித்ததால் அந்த பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்ட நிலையில், இன்னும் அங்கு இயல்புநிலை திரும்பவில்லை.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.