பாரதியாரின் பேத்தி மறைவு – முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்..!
மகாகவி பாரதியாரின் பேத்தி லலிதா மறைவுக்கு முதல்வர் இரங்கல்.
மகாகவி பாரதியாரின் பேத்தி லலிதா(94) வயது மூப்பின் காரணமாக இன்று காலமானார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சிறந்த கவிஞரும் இசையாசிரியரும் மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் மகள்வயிற்றுப் பேத்தியுமான திருமதி. லலிதா பாரதி அம்மையார் அவர்கள் இயற்கை எய்தினார் என்றறிந்து மிகவும் வருந்துகிறேன் என இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
“சிறந்த கவிஞரும் இசையாசிரியரும் மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் மகள்வயிற்றுப் பேத்தியுமான திருமதி. லலிதா பாரதி அம்மையார் அவர்கள் இயற்கை எய்தினார் என்றறிந்து மிகவும் வருந்துகிறேன்.
1/2 pic.twitter.com/RJgghDVTf7
— CMOTamilNadu (@CMOTamilnadu) December 26, 2022