சான்றிதழ்களை ஒரு மாதத்திற்குள் வழங்க வேண்டும் – முதல்வர் மு.க.ஸ்டாலின்
சாதி, வருவாய், வாரிசு சான்றிதழ்கள் கோரி மக்கள் விண்ணப்பித்தால் ஒரு மாதத்திற்குள் வழங்க வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தல்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை தலைமை செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டத்தில் ஈடுபட்டார். அந்த கூட்டத்தில், சாதி, வருவாய், வாரிசு சான்றிதழ்கள் கோரி மக்கள் விண்ணப்பித்தால் ஒரு மாதத்திற்குள் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும், நிலுவையில் உள்ள சான்றிதழ்களை ஒரு மாதத்திற்குள் தாமதமின்றி வழங்க வேண்டும். சான்றிதழ்கள் தரப்பட்ட விவரங்களை உடனுக்குடன் தகவல் பலகையில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.