விமான நிலையத்திற்கு அருகே 5ஜி சேவை பெற முடியாது.? மத்திய தோலை தொடர்பு துறை கடிதம்.!
விமான நிலையங்கள் அருகில் 5ஜி சேவை நிறுவப்படுவதால் விமான சேவைகள் பாதிக்கும் என மத்திய தொலைதொர்பு துறை கடிதம் எழுதியுள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் முதல் இந்தியாயாவில் 5ஜி சேவையானது இந்தியாவில் தொடங்கப்பட்டது. முதற்கட்டமாக ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் என முன்னணி நிறுவனங்கள் முக்கிய நகரங்களில் சேவையை தொடங்க முதற்கட்ட பணிகளை முழுவீச்சில் தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில், மத்திய தொலைதொர்பு துறை 5ஜி சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு கடிதம் எழுதியுள்ளது. அதில் விமான நிலையங்கள் சுற்றி 2.1 கிமீ சுற்றளவுக்கு 5ஜி சேவைகளை வழங்குதலை நிறுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
5ஜி சேவைக்காக C-band 5G பேஸ் ஸ்டேஷன்களை நிறுவுவதன் காரணமாக விமான சேவைகளில் பாதிப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானங்கள் தரையிறங்கும் போதும், பறக்க தொடங்கும் போதும் குறிப்பிட்ட சிக்னல்களை வழங்கும். அப்போது அதிவேக 5ஜி சேவை அங்கு செயல்பாட்டில் இருந்தால் அது சில பிரச்சனைகளை உண்டாக்கும் என்பதால் 2.1 கிமீ சுற்றளவுக்கு 5ஜி சேவைக வழங்குதல் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என கடிதம் எழுதப்பட்டுள்ளது.
ஏற்கனவே, அதிவேக 5ஜி சேவை வழங்கும் அமெரிக்கா இதே போன்ற விமான சேவை பிரச்சனைகளை எதிர்கொண்டு வருவதாகவும் தொழில்நுட்ப வல்லுநர்கள் கூறிவருகின்றனர்.