108 அவசர ஊர்திகளின் எண்ணிக்கையை தமிழகத்தில் மேலும் அதிகரிக்க நடவடிக்கை!சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,தமிழகத்தில் 108 அவசர ஊர்திகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.
108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் தினம் சென்னை மருத்துவக்கல்வி இயக்குநரக வளாகத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்டம் தோறும் சிறப்பாக செயல்பட்ட இரு அவசர ஊர்தி ஓட்டுநர்கள் வரவழைக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டனர். தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஜெகதீஷ் குரங்கணி தீவிபத்து சம்பவத்தின் போது சம்பவ இடத்திற்கு முதன்முதலில் சென்றதோடு நிலைமையை வீடியோவாக எடுத்து வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தார். இது தீவிரத்தை உணர்ந்து அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க பேருதவியாக இருந்ததாக கூறி கவுரவிக்கப்பட்டார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், விபத்து நிகழ்ந்த இடங்களுக்கு அவசர ஊர்திகள் சென்றடையும் சராசரி நேரம் 8.32 நிமிடங்களாக குறைக்கப்பட்டுள்ளதாகவும், இதனை மேலும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.