துபாயில் ₹33 கோடி ஜாக்பாட் அடித்த இந்தியர்.!
துபாயில் இந்திய டிரைவர் அஜய் ஒகுலா என்பவர், லாட்டரியில் ₹33 கோடி ஜாக்பாட் வென்றுள்ளார்.
இந்தியாவைச் சேர்ந்த ஓட்டுநர் அஜய் ஓகுலா, எமிரேட்ஸ் டிராவில் 15 மில்லியன் திர்ஹம், (ரூ.33 கோடி) மதிப்பிலான லாட்டரி பரிசை வென்றுள்ளார். தென்னிந்திய கிராமத்தைச் சேர்ந்த அஜய் ஒகுலா, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஐக்கிய அரபு அமீரகத்தில், வேலைக்காக வந்தார். தற்போது நகைக்கடை நிறுவனத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வரும் அவர், மாதம் 3,200 திர்ஹம் (ரூ.71,968) சம்பாதிக்கிறார்.
பரிசு வென்றது குறித்து அஜய் ஓகுலா, கூறும்போது என்னால் நம்ப முடியவில்லை, நான் இந்தத் தொகையைக் கொண்டு எனது அறக்கட்டளையைத் தொடர்ந்து உருவாக்குவேன். இது எனது சொந்த ஊர் மற்றும் அண்டை கிராமங்களில் உள்ள மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பெற பலருக்கு உதவும்” என்று ஓகுலா கூறினார்.
இதே எமிரேட்ஸ் டிராவில் 50 வயதான பிரிட்டிஷ் நாட்டவரான பாலா லீச் என்பவர், திர்ஹம் 77,777 வென்றுள்ளார்.