பழனிசாமிக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் கண்டனம்!
வதந்திகளை நம்பி அறிக்கை விட்டுள்ளார் பழனிசாமி என்று அமைச்சர் அன்பில் மகேஷ் விமர்சனம்.
ஆதாரமற்ற அறிக்கைவிடும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கண்டனம் தெரிவித்துள்ளார். அரசு பள்ளிகளை வலுப்படுத்தும் நாம் ஊர் பள்ளி திட்டத்தை கொச்சைப்படுத்துகிறார் எடப்பாடி பழனிசாமி. திராவிட மாடல் அரசின் கீழ் பொது கல்வி முறையை நோக்கி தமிழ்நாடு இன்று நகர்ந்து கொண்டிருக்கிறது.
நம்ம ஊர் பள்ளி திட்டம் பற்றி புரிதல் இல்லாதவர்கள் கூறும் வதந்திகளை நம்பி அறிக்கை விட்டுள்ளார் பழனிசாமி என குற்றசாட்டியுள்ளார். திமுக அரசின் புதிய திட்டத்துக்கு ஒரே நாளில் ரூ.50 கோடி வந்ததை பொறுக்க முடியாமல் பேசிய வருகிறார் பழனிசாமி எனவும் அமைச்சர் விமர்சித்துள்ளார்.