அதிகரிக்கும் கொரோனா..! நாடு முழுவதும் டிச.27ல் கொரோனா தடுப்பு ஒத்திகை!
வரும் 27-ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பு ஒத்திகை நடத்த வேண்டும் என மாநில அரசுகளுக்கு ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவுறுத்தல்.
சீனா, அமெரிக்கா, தென்கொரியா போன்ற நாடுகளில் மீண்டும் கொரானா தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், இந்தியா முழுவதும் மாநில அரசுகள் விழிப்புடன் இருக்குமாறும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த நிலையில் வரும் 27-ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பு ஒத்திகை நடத்த வேண்டும் என மாநில அரசுகளுக்கு ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் அத்தியாவசிய மருந்துகள், தடுப்பூசிகள், பரிசோதனை கருவிகள், வென்டிலேட்டர்கள் கையிருப்பு உள்ளிட்டவற்றை உறுதிப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.