#BREAKING: ஊராட்சி துணை தலைவர் தேர்தல் – வெற்றி அறிவிப்பு
கரூர் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவருக்காக நடைபெற்ற தேர்தலில் திமுக வேட்பாளர் தேன்மொழி தியாகராஜன் வெற்றி.
கரூர் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் தேர்தலில் 5வது வார்டு உறுப்பினர் திமுக வேட்பாளர் தேன்மொழி தியாகராஜன் வெற்றி என அறிவிக்கப்பட்டுள்ளது. கரூர் ஊராட்சி துணைத் தலைவர் தேர்தல் முடிவை வெளியிடலாம் என உயர் நீதிமன்றம் மதுரை கிளை ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. உயர் நீதிமன்றம் மதுரை கிளையின் உத்தரவை தொடர்ந்து தேர்தல் முடிவை வெளியிட்டார் மாவட்ட ஆட்சியர்.
கடந்த டிச19ம் தேதி கரூர் மாவட்ட ஊராட்சி துணை தலைவர் தேர்தல் நடைபெற்றது. அப்போது, அதிமுகவை சேர்ந்த திருவிக என்பவர் கடத்தப்பட்டதாகவும், இந்த தேர்தலில் திமுக முறைகேடாக செயல்பட்டதாகவும், தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது எனவும் அந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதனை விசாரித்த உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள், இந்த ஊராட்சி மன்ற துணை தலைவர் தேர்தலில் திமுக சார்பில் 7 வாக்குகளும், அதிமுகவுக்கு 4 வாக்குகளும் பதிவாகியுள்ளது. எனவே, மனுதாரரின் வாக்கினால் தேர்தல் முடிவு மாறப் போவதில்லை என்பதால் தேர்தல் முடிவுகளை வெளியிடலாம் என அறிவித்திருந்த நிலையில், கரூர் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் தேர்தலில் தேன்மொழி தியாகராஜன் வெற்றி என அறிவிக்கப்பட்டுள்ளது.