#IPL2023Auction: நிக்கோலஸ் பூரன் ரூ.16 கோடிக்கு ஏலம்!

Default Image

நிக்கோலஸ் பூரனை ரூ.கோடிக்கு ஏலம் எடுத்த லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்.

ஐபிஎல் மினி ஏலத்தில் மேற்கிந்திய தீவுகளை சேர்ந்த வீரர் நிக்கோலஸ் பூரனை ரூ.கோடிக்கு ஏலம் எடுத்து லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி. கொச்சியில் நடைபெற்று வரும் 2023 ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎஸ் மினி ஏலத்தில் இதுவரை இல்லாத அளவில் அதிக தொகைக்கு வீரர்களை அணி நிர்வாகம் ஏலம் எடுத்து வருகிறது.

அந்தவகையில் சாம் கர்ரனை, ஐபிஎல் வரலாறில் இதுவரை இல்லாத அதிகபட்ச தொகையாக ரூ.18.50 கோடிக்கு பஞ்சாப் அணி வாங்கியது. ஆஸ்திரேலியாவின் கேமரூன் க்ரீன் பலத்த போட்டிகளுக்கு இடையில் ரூ.17.50 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியுள்ளது. இதையடுத்து, இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், ரூ.16.25 கோடிக்கு சென்னை அணி வாங்கியது.

இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் ஹாரி ப்ரூக்கை ரூ.13.25 கோடிக்கு சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வாங்கியது. இந்த வரிசையில் தற்போது, மேற்கிந்திய தீவுகளை சேர்ந்த வீரர் நிக்கோலஸ் பூரனை ரூ.16 கோடிக்கு லக்னோ ஜெயன்ட்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்