மாணவர்களிடம் மதம் சார்ந்த பாடல்.? உ.பி பள்ளி முதல்வர் அதிரடி சஸ்பெண்ட்.!
உத்திர பிரதேச மாநிலத்தில் பள்ளியில் இஸ்லாமிய பாடல் பாடிய விவகாரத்தில் பள்ளி முதல்வர் சஸ்பெண்ட்.
உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் செயல்பட்டு வரும் அரசு பள்ளியில் காலையில் பள்ளி மாணவர்களுக்கு நடைபெறும் அசெம்பிளியின் போது, மாணவர்கள் அல்லாமா இக்பால் என்று அழைக்கப்படும் முஹம்மது இக்பால் என்பவரால் எழுதப்பட்ட இஸ்லாமிய பாடலை பாடியுள்ளனர்.
இந்த அசெம்பிளி வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது. இதனை தொடர்ந்து, உள்ளூர் இந்து அமைப்பு நிர்வாகி ஒருவர் காவல்துறையினரிடம் புகார் அளித்தார். அதில், பள்ளியில் இஸ்லாமிய பாடலை மாணவர்களிடையே பாட சொல்லி மதமாற்ற முயற்சியில் பள்ளி நிர்வாகம் ஈடுபடுகிறது என குற்றம் சாட்டி இருந்தார்.
இந்த புகாரை அடுத்து அரசு பள்ளி முதல்வர் நஹித் சித்திக் மீது காவல்துறையினரால் வழக்குபதிவு செய்யப்பட்டது. மேலும் அவரை சஸ்பெண்ட் செய்து, அவரை விசாரணைக்கு வருமாறும் உத்திர பிரதேச பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.