#IPL Auction LIVE: ஐபிஎல் 2023க்கான ஏலம்! கைல் ஜேமிசன், சென்னை அணிக்கு விற்கப்பட்டுள்ளார் .!

Default Image
  • நியூசிலாந்து அணியின் கைல் ஜேமிசன், சென்னை அணிக்கு அடிப்படை விலையான ரூ.1 கோடிக்கு விற்கப்பட்டுள்ளார்.
  • ஆஸ்திரேலியாவின் டேனியல் சாம்ஸ், ரூ.75 லட்சத்திற்கு லக்னோ அணிக்கு விற்கப்பட்டார்.
  • வெஸ்ட் இண்டீஸ் அணியின் ரோமரியோ ஷெப்பர்ட் ரூ.50 லட்சத்திற்கு லக்னோ அணிக்கு விற்கப்பட்டார்.
  • இங்கிலாந்து அணியின் வில் ஜாக்ஸ், பெங்களூரு அணிக்கு ரூ.3.20 கோடிக்கு விற்கப்பட்டார்.
  • இந்தியாவின் மனீஷ் பாண்டே, பலத்த போட்டிகளுக்கு பிறகு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, ரூ.2.40 கோடிக்கு வாங்கியுள்ளது.
  • சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், மேற்கொண்டு விவ்ரந்த் ஷர்மாவை ரூ.2.60 கோடிக்கும், உபேந்திர சிங் யாதவ் ரூ.25 லட்சத்திற்கும், சன்விர் சிங் ரூ.20 லட்சத்திற்கும், சமர்த் வியாஸ் ரூ.20 லட்சத்திற்கும் வாங்கியது.
  • சென்னை அணி, மேற்கொண்டு ஆல் ரவுண்டரான நிஷாந்த் சிந்து ரூ.60 லட்சத்திற்கும், ஷேக் ரஷீத் ரூ.20 லட்சத்திற்கும் வாங்கியது.
  • இந்தியாவின் கே.எஸ்.பரத், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ரூ.1.20 கோடிக்கு விற்கப்பட்டார்.
  • இந்தியாவின் முகேஷ் குமார், டெல்லி அணிக்கு ரூ.5.50 கோடிக்கு விற்கப்பட்டார்.
  • இந்திய வீரர் ஷிவம் மாவி, குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ரூ.6 கோடிக்கு விற்கப்பட்டார்.
  • தமிழக வீரர் ஜெகதீசன், கொல்கத்தா அணிக்கு ரூ.90 லட்சத்திற்கு விற்கப்பட்டார்.
  • மயங்க் மார்கண்டே, ரூ.50 லட்சத்திற்கு சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வாங்கியுள்ளது.
  • ஜெய் ரிச்சர்ட்சன் மும்பை அணிக்கு ரூ.1.50 கோடிக்கு விற்கப்பட்டார்.
  • ஜெயதேவ் உனட்கட் ரூ.50 லட்சத்திற்கு, லக்னோ அணிக்கு விற்கப்பட்டார்.
  • இஷாந்த் சர்மா டெல்லி அணிக்கு ரூ.50 லட்சத்திற்கு விற்கப்பட்டார்.
  • இங்கிலாந்து அணியின் அடில் ரஷீத் ரூ.2 கோடிக்கு சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு விற்கப்பட்டார்.
  • இங்கிலாந்து அணியின் டாப்லே ரூ.1.90 கோடிக்கு பெங்களூரு அணி வாங்கியது.
  • இங்கிலாந்து அணியின் பில் சால்ட், டெல்லி அணிக்கு ரூ.2 கோடிக்கு விற்கப்பட்டார்.
  • தென்னாபிரிக்காவின் ஹென்ரிக் கிளாஸ்ஸன், ரூ.5.25 கோடிக்கு சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வாங்கியுள்ளது.
  • வெஸ்ட் இண்டீஸ் அணியின் விக்கெட் கீப்பர் நிகோலஸ் பூரன், ரூ. 16 கோடிக்கு லக்னோ அணிக்கு விற்கப்பட்டார்.
  • வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஒடின் ஸ்மித், ரூ. 50 லட்சத்திற்கு குஜராத் டைட்டன்ஸ் அணியால் வாங்கப்பட்டார்.
  • பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ் க்கு அணிகளுக்கிடையே கடுமையான போட்டி நிலவியது, இறுதியில் ரூ.16.25 கோடிக்கு அணிக்கு சென்னை அணிக்கு விற்கப்பட்டார்.
  • ஆஸ்திரேலியாவின் கேமரூன் க்ரீன் பலத்த போட்டிகளுக்கு இடையில் ரூ.17.50 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியுள்ளது.
  • வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜேசன் ஹோல்டர் ரூ.5.75 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ்  அணி வாங்கியது.
  • ஜிம்பாப்வே அணியின் சிக்கந்தர் ராசா, அடிப்படை விலையான ரூ.50 லட்சத்திற்கு பஞ்சாப் அணி வாங்கியது.
  • சென்னை அணிக்காக விளையாடி வந்த சாம் கர்ரன் இதுவரை இல்லாத அதிகபட்ச தொகையாக ரூ.18.50க்கு பஞ்சாப் அணிக்கு விற்கப்பட்டார். பலத்த போட்டிகளுக்கு மத்தியில் அவரை பஞ்சாப் அணி அதிகபட்ச ஏலத்தொகைக்கு வாங்கியது.
  • இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் மற்றும் தென்னாப்பிரிக்காவின் ரூஸோவ் ஆகியோர் தற்போதைய ஏலத்தில் விற்கப்படவில்லை.
  • சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ரஹானே வை அடிப்படை விலையான ரூ.50 லட்சத்திற்கு வாங்கியது.
  • இந்திய வீரரான மயங்க் அகர்வால் ரூ.8.25 கோடிக்கு சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வாங்கியது.
  • இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் ஹாரி ப்ரூக் கிற்கு கடும் போட்டி நிலவியது, இறுதியில் ரூ.13.25 கோடிக்கு சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வாங்கியது.
  • ஏலத்தில் முதல் வீரராக நியூசிலாந்து அணியின் கேன் வில்லியம்சன் அடிப்படை விலையான ரூ.2 கோடிக்கு குஜராத் டைட்டன்ஸ் அணியால் வாங்கப்பட்டார்.
  • அடுத்த ஆண்டு நடைபெறும் 16 வது ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் இன்று கொச்சியில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

MK Stalin - AUS vs IND
muthu ,meena (4) (1)
Suburban Railway - MTC Chennai
SPVelumani
Seeman - Rajini
goat vijay sk rajinikanth