ராகுல்காந்தியின் டிவிட்க்கு பதில் ட்விட் செய்த பா.ஜ.க..!

Default Image
வருடாந்திர மருத்துவ பரிசோதனைக்காக காங்கிரஸ்  முன்னாள் தலைவர் சோனியா நேற்று இரவு அமெரிக்கா புறப்பட்டுச் சென்றுள்ளார். அவருடன் காங்கிரஸ் தலைவர் ராகுலும் சென்றுள்ளார். சோனியாவுக்கு மருத்துவ பரிசோதனை முடிந்த பிறகு ஒரு வாரத்தில் இந்தியா திரும்ப ராகுல் திட்டமிட்டுள்ளார். அதே சமயம் அமெரிக்காவிலேயே சிறிது காலம் ஓய்வு எடுக்க சோனியா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று அமெரிக்கா புறப்பட்டுவதற்கு முன் ராகுல் டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில், தாய் சோனியாவின் வருடாந்திர மருத்துவ பரிசோதனைக்காக அவருடன் செல்வதால் சில நாட்கள் இந்தியாவில் இருக்க மாட்டேன். அதனால் இதை பூதாகரமாக்கி தகவல் பரப்ப, அதிகப்படியாக பாடுபட வேண்டாம் என பா.ஜ., சமூக வலைதளத்தில் இருக்கும் நண்பர்களை கேட்டுக் கொள்கிறேன். விரைவில் இந்தியா வந்து விடுவேன் என குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு பா.ஜ., பதிவிட்டுள்ள பதில் டுவிட்டில், சோனியா நலமடைய நாங்கள் வாழ்த்துகிறோம். அமைச்சரவை உருவாக்கத்திற்காக கர்நாடக பெண்கள் காத்துக் கொண்டுள்ளனர். அதனால் கர்நாடக அரசு பணியை துவக்கி, அவர்களுக்கு உதவ வேண்டும். நீங்கள் புறப்படுவதற்கு முன் கர்நாடகாவில் அரசு செயல்பட துவங்கும் என உறுதி அளிக்க முடியுமா? நீங்கள் தொடர்ந்து அவர்களுக்கு நல்ல பொழுபோக்காக இருப்பீர்கள் என சமூகவலைதளம் நம்புகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

ராகுல் வெளிநாடு செல்வதால் கர்நாடக அமைச்சரவை அமைக்கப்படவில்லை என கூறுவது சரியல்ல. அவரை எந்த நேரமும் போனில் தொடர்பு கொள்ளலாம் என காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சி வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்