மின் இணைப்புடன் 1.33 கோடி ஆதார் எண் இணைப்பு..! அமைச்சர் தகவல்..!
இன்றுவரை மின் இணைப்புடன் 1.33 கோடி ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்.
மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதற்கான கால கேடு டிசம்பர் 31 வரையில் என கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இன்று வரை 2,811 பிரிவு அலுவல் சிறப்பு முகாம்கள் மூலம் 2.74 லட்சம் இணைக்கப்பட்டது. ஆன்லைனில் மூலம் 1.48 லட்சம் இணைக்கப்பட்டது. இன்று வரை மொத்தம் 1.33 கோடி இணைக்கப்பட்டது என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.