தாஜ்மஹால் பார்க்க வேண்டுமா.? கொரோனா பரிசோதனை கட்டாயம்.! வெளியான அதிரடி அறிவிப்பு.!

தாஜ்மஹாலை பார்க்க செல்ல வேண்டும் என்றால் கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் என்ற சான்று கட்டாயம். – ஆக்ரா மாவட்ட நிர்வாகம்.

உலகில் ஒரு சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் ஆரம்பித்துள்ள காரணத்தால் மத்திய அரசும் அதற்கான வழிகாட்டு அறிவுறுத்தல்களை மாநில அரசுகளுக்கு வழங்கி வருகிறது. மேலும் மக்கள் முகக்கவசம் அணியவும் அறிவுறுத்தியது.

தற்போது கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆக்ராவில் உள்ள உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை பார்க்க செல்ல வேண்டும் என்றால் கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் என சான்று காண்பித்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவர் என ஆக்ரா மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Leave a Comment