ஆர்எஸ்எஸ், பாஜக தியாகத்தால் இந்தியா எழுந்து நிற்கிறது.! எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன் கருத்து.!
ஆர்எஸ்எஸ், பாஜக. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் தியாகத்தால் தான் தற்போது இந்தியா எழுந்து நிற்கிறது. – பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன்.
சுதந்திரத்திற்க்கு காங்கிரஸ் நிறைய தியாகங்களை செய்துள்ளது. ஆனால் பாஜக எதுவும் செய்யவில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே பாஜக மீது விமர்சனம் வைத்து இருந்தார். இதற்கு பாஜக தரப்பில் இருந்த்து பலர் தங்கள் எதிர்ப்பை கூறி வருகின்றனர்.
தமிழக பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன் கூறுகையில், ஆர்எஸ்எஸ், பாஜக. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் தியாகத்தால் தான் தற்போது இந்தியா எழுந்து நிற்கிறது. ஆர்எஸ்எஸ் என்பது பிறந்ததே சுதந்திரப் போராட்டத்திற்காக தான் என குறிப்பிட்டார்.
மேலும், ஆர்எஸ்எஸ்-ல் இருந்த பலரும் சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்தவர்கள்தான்எனவும் கூறினார் . அவர் மேலும் கூறுகையில், இந்த உண்மைகளை மறைத்துவிட்டு, சுதந்திரப் போராட்டத்தில் ஆர்எஸ்எஸ், பாஜகவுக்கு சம்மந்தமில்லை என்பது போல பலர் அவதூறு பரப்பி வருகிறார்கள். என தனது கார்கே கூறிய கருத்துக்கு எதிர்ப்பை தெரிவித்தார் பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன்.