#BREAKING: வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு மண்டலம்!
வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவானது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாகையில் இருந்து தெற்கு – தென்கிழக்கு தோசையில் 600 கிமீ தொலைவில் உள்ளது.
சென்னையில் இருந்து தென்கிழக்கு திசையில் 690 கிமீ தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு – வடமேற்கு திசையிலும் பின்னர் மேற்கு – தென்மேற்கு திசையிலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகரும் என வானிலை மையம் கணித்துள்ளது. மேலும், குமரிக்கடலை நோக்கி செல்லும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.