Mumbai: வீட்டின் ரகசிய அறையில் இருந்து 26 பெண்கள் மீட்பு.. 4 பேர் கைது!
மும்பையில் வீட்டின் உள்ளே பிரத்யேகமாக கட்டப்பட்ட ரகசிய அறையில் இருந்து 26 பெண்களை மீட்ட காவல்துறை.
மகாராஷ்டிரா மாநிலம் தெற்கு மும்பையில் ஒரு வீட்டின் உள்ளே பிரத்யேகமாக கட்டப்பட்ட குழியில் (ரகசிய அறை) அடைத்து வைக்கப்பட்டிருந்த 26 பெண்களை மும்பை போலீசார் மீட்டுள்ளனர். அங்கு வணிகரீதியாக சதை (flesh trade racket) வியாபாரம் அதாவது விபசாரம் நடந்தாக கூறப்படுகிறது.
இந்த சோதனைக்குப் பிறகு மோசடியில் ஈடுபட்ட மூன்று பெண்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். ஆனால் அவர்களின் 10 பேர் தப்பியோடியதாக கூறப்படுகிறது. மும்பை லேமிங்டன் ரோடு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக சமூக குற்றத்தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்ததன் தகவலின் அடிப்படையில் இந்த சோதனையானது நடைபெற்றது.
வீட்டின் ரகசிய அறையில் இருந்து மீட்கப்பட்டதும், வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பெண்கள், தங்களை வலுக்கட்டாயமாக விபசாரத்தில் தள்ளப்பட்டதாக காவல்துறையிடம் கூறியதாக கூறப்படுகிறது. எஸ்எஸ்பி பின்னர் கைது செய்யப்பட்டவர்களையும், மீட்கப்பட்ட பெண்களையும் மேலதிக விசாரணைக்காக டிபி மார்க் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி), 308, மற்றும் ஆபாசமான குற்றங்கள் உட்பட தொடர்புடைய பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண்களை குழிக்குள் மறைத்து வைத்திருந்ததால் IPC பிரிவு 308 போடப்பட்டுள்ளது என அதிகாரி கூறியுள்ளார். மும்பை சிட்டி பாரில் மற்றொரு குழிக்குள் மறைந்திருந்த 17 பெண்களை போலீசார் மீட்ட சில நாட்களுக்குப் பிறகு இந்த சம்பவம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.