கரூரில் ஓர் தெருவுக்கு அமைச்சர் உதயநிதியின் பெயர்.? கவுன்சிலர் புதிய தீர்மானம்.!
கரூர் மாவட்ட கவுன்சிலர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெயரை வைக்க மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வந்தார்.
கடந்த தேர்தலில் சென்னை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் உதயநிதி ஸ்டாலின். இவர் அண்மையில் மாற்றியமைக்கப்பட்ட தமிழக அமைச்சரவையில் புதியதாக விளையாட்டு மேம்பட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.
அண்மையில், கரூரில், கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், 36வது வார்டு கவுன்சிலர் வசுமதி, கரூர் மாநகராட்சியில் ஒரு தெருவுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெயரை வைக்க தீர்மானம் கொண்டுவந்தார். இந்த தீர்மானத்திற்கு திமுக கவுன்சிலர்கள் ஆதரவு தெரிவித்தாலும், மேயர் கவிதா, இந்த தீர்மானம் நிராகரிக்கப்பட்டதாக அறிவித்தார்.