காயமடைந்தவர்கள் விரும்பும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு!முதல்வர் பழனிசாமி
தூத்துகுடி மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், தூத்துக்குடியில் முழு அமைதி நிலவ பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.போராட்டத்தின்போது காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் காயமடைந்தவர்கள் விரும்பும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.
துத்துக்குடி மக்களின் உணர்வுகளுக்கும், கருத்துக்களுக்கும் மதிப்பளித்து, ஸ்டெர்லைட் ஆலை மூடடப்பட்டுள்ளது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.