நெரிசலான இடங்களில் முகக்கவசம் அணியுங்கள் மற்றும் தடுப்பூசி – அரசு அறிவுறுத்தல்
சீனாவில் அதிகரித்து வரும் கொரோனாவுக்கு மத்தியில் நெரிசலான இடங்களில் முகக்கவசம் அணியுமாறு குடிமக்களை அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா தொடர்பான மத்திய சுகாதார அமைச்சரின் கூட்டத்திற்குப் பிறகு NITI ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் இது பற்றி கூறுகையில் , “கூடுதல் இணை நோய்கள் உள்ளவர்களுக்கு அல்லது அதிக வயதுடையவர்கள் தங்களை பாதுகாத்து கொள்வதில் முகக்கவசம் அணிவது மிகவும் முக்கியமானது என்றார்.
27-28% மக்கள் மட்டுமே தடுப்பு மருந்துகளை எடுத்துள்ளனர். மற்றவர்கள், குறிப்பாக மூத்த குடிமக்கள், முன்னெச்சரிக்கை அளவை எடுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
“விமானப் போக்குவரத்தில் இப்போது எந்த மாற்றமும் இல்லை,” என்று அவர் மேலும் கூறினார்.
Use a mask if you are in a crowded space, indoors or outdoors. This is all the more important for people with comorbidities or are of higher age: Dr VK Paul, Member-Health, NITI Aayog after Union Health Minister’s meeting on COVID pic.twitter.com/14Mx9ixIod
— ANI (@ANI) December 21, 2022