48 வருடம் கழித்து மீண்டும் தமிழ் திரையுலகை மிரட்ட வரும் மக்கள் திலகம் எம்ஜிஆர்.!
சினிமாவில் இருக்கும் டாப் நடிகர்களின் பிறந்த நாள் அல்லது ஏதேனும் பண்டிகைகள் என்றாலே அவர்கள் நடித்த பழைய படங்கள் ரீ-ரிலீஸ் ஆகிவிடும். அந்த வகையில், சமீபத்தில் கூட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு கடந்த டிசம்பர் 10-ஆம் தேதி “பாபா” திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்த திரைப்படத்தை தொடர்ந்து மறைந்த நடிகர் எம்.ஜி.ஆர் நடித்த ஒரு திரைப்படம் ரீ-ரிலீஸ் ஆகவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. அது எந்த திரைப்படம் என்றால், கடந்த 1974-ஆம் ஆண்டு இயக்குனர் எஸ்.பாலசுப்ரமணியன் இயக்கத்தில் வெளியான “சிரித்து வாழவேண்டும்” படம் தான்.
இந்த திரைப்படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக லதா நடித்திருந்தார். இந்த திரைப்படம் கிட்டத்தட்ட 48 ஆண்டுகளுக்கு பிறகு டிஜிட்டல் முறையில் வடிவமைக்கப்பட்டு அடுத்த ஆண்டு ஜனவரி மதம் 17-ஆம் தேதி எம்.ஜி.ஆர். பிறந்த நாளை முன்னிட்டு ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளதாம்.
இதையும் படியுங்களேன்- உடல் எடையை குறைத்து வேற லெவலுக்கு மாறிய அனுஷ்கா…! விரைவில் தரமான ரீ- என்ட்ரி…?
நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு, எம்.ஜி.ஆர் நடித்த “சிரித்து வாழவேண்டும்” படம் ரீ-ரிலீஸ் ஆகவுள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். மேலும் ஏற்கனவே எம்.ஜி.ஆரின் ஆயிரத்தில் ஒருவன், நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபர் உள்ளிட்ட படங்கள் ரீ-ரிலீஸ் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.