சொத்துக் குவிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மேல்முறையீடு!

Default Image

சொத்து குவிப்பு வழக்குகளை ரத்து செய்ய முடியாது என்ற உத்தரவை எதிர்த்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மேல்முறையீடு.

மாநகராட்சி பணிகளில் டெண்டர் ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் சமீபத்தில் ரத்து செய்திருந்தது. ஆனால், அவர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை ரத்து செய்ய முடியாது என உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தது.

இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்பான சொத்துக்குவிப்பு வழக்குகளை ரத்து செய்ய மறுத்த உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வேலுமணி சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், முன்னாள் அமைச்சர் வேலுமணி தொடர்பான வழக்கில் தமிழக அரசு சார்பில் கேவியட் மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்