BREAKING NEWS:அரசாணையை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்க தூத்துக்குடி ஆட்சியர் புறப்பட்டார்!
அரசாணையை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்க தூத்துக்குடி ஆட்சியர் புறப்பட்டார்.இதேபோல் ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்க உள்ள நிலையில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிக்கையில்:
பசுமைத் தீர்ப்பாயம், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய நிபந்தனைகளை ஸ்டெர்லைட் ஆலை நிறைவேற்றவில்லை.மாசுக்கட்டுப்பாட்டு வாரிய நிபந்தனைகளை பூர்த்தி செய்யாததால் ஆலைக்கான மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டதுடன் தண்ணீர் விநியோகமும் நிறுத்தம்.29.3.2013-ல் அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா, ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டார் .இந்த உத்தரவை எதிர்த்து, செய்த மேல்முறையீட்டில் 8.8.2013அன்று ஆலையை இயக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்தது. 9.4.2018-ல் ஆலையை இயக்குவதற்கான இசைவாணையை வழங்க தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மறுத்தது. 24.5.2018 அன்று முதல் ஆலைக்கான மின்சாரம் மற்றும் தண்ணீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
எனவே தூத்துக்குடி மாவட்ட மக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று அரசாணை வெளியிடப்பட்டதாக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.