காலக்கெடு என்பது கண்துடைப்பு தானா? – சு.வெங்கடேசன் எம்.பி
கல்வி அமைச்சக வழிகாட்டல்கள் பின்பற்றப்படுகிறதா என்பதை சமூக நீதி அமைச்சகம் கண்காணிக்க வேண்டும் என்று சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட்.
இடஒதுக்கீட்டு காலி இடங்களை நிரப்ப அரசு சொன்ன ஓராண்டு கெடு முடிந்தது. ஆனால் ஐ.ஐ.டி / மத்திய பல்கலைக் கழக பேராசிரியர் பணி நியமனத்தில் 1400 க்கும் மேற்பட்ட இடங்கள் நிரப்பப்படவில்லை என சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட் செய்துள்ளார்.
மேலும், மத்திய பல்கலைக்கழகங்கள் 20 % இடங்களை கூட நிரப்பவில்லை. காலக்கெடு என்பது கண்துடைப்பு தானா? உயர்கல்வி நிலையங்களின் தன்னாட்சி அரசியல் சட்டத்தை விஞ்சியதா? இது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். கல்வி அமைச்சக வழிகாட்டல்கள் பின்பற்றப்படுகிறதா என்பதை சமூக நீதி அமைச்சகம் கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.